Saturday, April 10, 2010

ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம்

உலகநாடுகளில் உள்ள நம் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும்
இணைந்து ஒரே பலகையில் படம் வரையலாம் கோடு கிறுக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

நேரடியாக பேசலாம் , குறுஞ்செய்தி அனுப்பலாம் , வீடியோ மூலம்
முகம் பார்த்து பேசலாம் இதையெல்லாம் தாண்டி ஆன்லைன் மூலம்
படம் வரையலாம் நாம் ஒரு கோடு வரைந்தால் அமெரிக்காவில்
இருக்கும் நண்பர் அந்த கோட்டை இணைக்க இன்னொரு கோடு
வரையலாம் என்று பல புது வித சேவைகளுடன் வந்துள்ளது.
வழக்கமாக நாம் பெயிண்ட் பிரஸ் -ல் என்னவெல்லாம் பயன்படுத்த
முடியுமோ அதை எல்லாம் நாம் இதில் பயன்படுத்தலாம் எல்லைவிட்டு
எல்லைதாண்டி ஒரு வரைபலகையை அனைவரும் நேரடியாக பகிர்ந்து
கொள்ளலாம். இணையத்தில் ஒரு ஒவிய ஆசிரியர் தன் மாணவர்கள்
அனைவருக்கும் நேரடியாக ஒவியம் வரைய சொல்லிக்கொடுக்கலாம்
அவர்களை வரையச்சொல்லியும் சரிபார்க்கலாம். புரோகிராமர்க்கு
தேவையான பிளாக் டையகிராம் என அனைத்தையும் நாம்
ஒவ்வொரு வடிவமாக அனைவருக்கும் தெளிவாக புரிய வைக்கலாம்.

இதற்காக மிகவேகமான இண்டெர்நெட் இணைப்பும் தேவையில்லை.
எளிமையாகத்தான் இருக்கிறது. இப்படி இந்த வரைபலகை மூலம்
வரையும் படங்களை சேமித்தும் கொள்ளலாம். பல பக்கங்கள்
இருப்பதால் ஒரு நண்பர் முதல் பக்கத்தில் வரையும் போது அடுத்த
நண்பர் இரண்டாம் பக்கத்திலும் படம் வரையலாம். கண்டிப்பாக இந்த
இணையதளம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். நாம்
உருவாக்கும் செசனுக்கு பெயர் வைத்து நம் நண்பரையும் உடன்
வரைபலகையில் படம் வரைய அழைக்கலாம்.

இணையதள முகவரி

Wednesday, March 24, 2010

நீங்களும் பாடகராகலாம்

நம்மில் பலரும் பாடும் திறன் கொண்டவராக இருப்பார்கள். மேடை, பாட்டு போட்டி என்று அவர்கள் செல்லாவிட்டாலும் தன்னுடைய குரலை சினிமா பாடலோடு பாடி மிக்ஸ் செய்து அதனை பதிவு செய்து கேட்டு அதனை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். அவ்வாறு சினிமா karaoké பாடலுடன் உங்கள் குரலை மிக்ஸ் செய்ய ஆடாஸிட்டி என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனளிக்கின்றது.

ஆடாஸிட்டி ஒரு ஓப்பன் சோர்ஸ் ஆகும். இது ஆடியோ எடிட்டிங்குகளுக்கு மிகவும் பயன்படும் ஓர் அற்புத மென்பொருளாகும். இன்றைய படைப்பில் நாம் எப்படி கரோக்கே பாடலுடன் நமது குரலை மிக்ஸ் செய்து பாடுவது என்பது குறித்து பார்ப்போம்.

முதலில் ஆடாஸிட்டியை இங்கு சொடுக்கி பதிவிறக்கம் செய்துகொண்டு கணினியில் நிறுவவும். பின்னர் ஆடாஸிட்டியில் உங்களுடைய பாடலை mp 3 கோப்பாக வெளியீடு செய்ய விரும்பினால் அதற்க்கு முதலில் mp3 Lame மை உங்களது கணினியில் நிறுவவேண்டும். அதற்க்கு இங்கே சொடுக்கி பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

முதலில் நீங்கள் பாட விரும்பும் பாடலின் karaoké (பின்னனி இசை ம‌ட்டும் குரல் நீங்கலாக) ஐ தேடி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அதனை குறித்து நாங்கள் எவ்வித உதவியும் செய்ய இயலாது காரணம் இந்திய காப்புரிமை சட்டத்தின் படி ஒரு பாடலை karaoké செய்வது குற்றம். இந்த கட்டுரைக்காக நாங்கள் உருவாக்கிய karaoké வெறும் சோதனைக்காகவே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிறைய தமிழ் இணையதளங்கள் karaoké பாடல்களை அவர்களது இணையத்தில் இலவசமாகவே வழங்குகின்றனர். உங்களது சொந்த முயற்சியில் நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதலில் ஆடாஸிட்டியை திறக்கவும். Edit>preferences (Devises)சென்று உங்களது சவுண்டு கார்டை தேர்வு செய்து கொள்ளவும்.

பின்னர் Recording சென்று Overdub:Play other tracks while recording new one என்பதை டிக் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் karaoké பாடலின் டிராக்கும் நீங்கள் பாடும் போது play ஆகும்.

இப்போது ஆடாஸிட்டியில் நீங்கள் பாட இருக்கும் பாடலின் karaoké ஐ திறந்து கொள்ளவும்.

இப்போது Recording ஐ அழுத்தவும் (சிகப்பு நிற பட்டன்). பாடலின் டைமிங்க்கு ஏற்றார் போல பாடவும். உங்களது குரல் இப்போது ஆடியோ டிராக்கின் கீழே புதிய டிராக் உருவாகி அதில் பதிவு செய்யப்படும்.

பாடி முடித்ததும் உங்களது குரலை இன்னும் மெருகேற்ற ஆடாஸிட்டியில் இருக்கும் Amplify,Echo,Delayஎன்ற மூன்று எபக்ட்களை பயன்படுத்தினாலே போதுமானது. இதில் Amplify என்பது உங்களது குரலின் volume மை உயர்த்த பயன்படுகின்றது எனவே நீங்கள் பாடும்போது உரக்க பாட வேண்டிய அவசியம் இல்லை.

Echo மற்றும் Delay உங்களது தேவைக்கேற்ப ஏற்றி இறக்கிக்கொள்ளவும்.

கடைசியாக File>Export சென்று நீங்கள் பாடிய பாடலை mp3 யாக சேமித்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான் பாடி அசத்துங்கள்….


Tuesday, March 23, 2010

ஆர்ட் ஆல்பம் கூகுளில் தேடுவது எளிதான காரியம்.......இதைப்பற்றி தான் இந்த பதிவு.

ஆர்ட் ஆல்பம் கூகுளில் தேடுவது எளிதான காரியம் இல்லை
பல தரப்பட்ட தரமான அனைத்து ஆர்ட் ஆல்பமும் ஒரே இடத்தில்
அதுவும் அதிக நேரம் செலவிடாமல் சில நிமிடங்களிலே எளிதாக
பெறலாம். அமேசான் துனையுடன் தான் இந்த இணையதளம்
அனைத்து ஆல்பத்தையும் நாம் தேடியவுடன் எடுத்து கொடுக்கிறது
இதைப்பற்றி தான் இந்த பதிவு.




ஆர்ட் ஆல்பம் சில நேரங்களில் பல இலட்சம் ரூபாய் வரை பணத்தை
அள்ளி இருக்கிறது என்னதான் கிராபிக்ஸ் வசதி கொண்ட பல
இணையதளங்கள் இருந்தாலும் இன்னும் அதிகமான பேர் இந்த
தளத்தை தான் விரும்புகின்றனர் இதற்காக பிரேத்யேகமாக அமேசான்
துனையுடன் உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இந்த
இணையதளத்தில் சென்று நாம் விரும்பும் ஆல்பத்தின் பேரை
கொடுத்து தேடலாம் உடனடியாக நமக்கு தேடி முடிவுகளை
கொடுக்கிறது அதுவும் சில நிமிடங்களில், இந்த இணையதளத்தில்
எந்த விளம்பரமும் இல்லை. ஆர்ட் ஆல்பம் என்றவுடன் இதில்
எல்லாமே ஆங்கில ஆல்பம் தான் என்று நினைக்க வேண்டாம் இந்த
இணையதளத்தில் சென்று Tamil என்று தேடினோம் நம் இசைஞானி
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று ஒரு பெரிய பட்டியலே
கொடுத்த்து. நாம் இதில் இருக்கும் ஆர்ட் ஆல்பத்தை பேஸ்புக்-ல்
இருக்கும் நம் நண்பருடனும் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.
ஆர்ட் ஆல்பம் பற்றி அனைத்து விபரங்களையும் தேடும்
நண்பர்களுக்கு கண்டிப்பாக இந்த தளம் உதவும்.



இணையதள முகவரி

Followers

 
Design by INDUJAN CREATION. Converted To INDUJAN PAKKAM By INDUJAN CREATION .